சிதம்பரத்தில் ஞானபிரகாசம் குளம் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் நகர்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சிறமைக்கப்பட்ட ஞானபிரகாசம் குளத்தை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி பகுதியில் ரூபாய் 2. 80 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூர்வாரி மேம்படுத்தப்பட்டுள்ள ஞானபிரகாசம் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தனர்.
உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். இராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் பா. தாமரைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Next Story