அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தி, பொற்பரங்கரனை, சிறுபேர்பாண்டி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர் சாரதி ஆகியோர் கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த மூன்று ஊராட்சிகளில் சுமார் 1000 ஏக்கரில் ஏரி நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.

அவர்கள் எளிய முறையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளின் நலன் கருதி எங்கள் ஊராட்சிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதாகர், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story