மலைகிராமத்தில் இந்தியன்வங்கி கிளை திறப்பு: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மலைகிராமத்தில் இந்தியன்வங்கி  கிளை திறப்பு: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

இந்தியன் வங்கி கிளை


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் புதிய இந்தியன் வங்கி கிளையை துவக்கி வைத்து, மலைகிராமத்தில் ஊரக வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார் மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைகிராமத்தில் சுமார் 1000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்கள் பலர் வங்கி சேவைக்களுக்காக 10 கிலோ மீட்டர் தூரம் சென்ற ஆம்பூர் நகருக்கு வரும் நிலை இருந்த சூழல் உள்ள நிலையில், நாயக்கனேரி மலைகிராமத்தில் தேசியமையமாக்கப்கப்பட்ட இந்தியன் வங்கியின் புதிய கிளையை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் முன்னிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து,

மலைகிராமத்தில் புதியதாக வங்கி கணக்கு துவக்கப்பட்ட நபர்களுக்கு புதிய வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கி நிழச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர்.. மலைகிராம மக்களுக்காக துவங்கப்பட்ட இந்த வங்கியில் பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக கடன் பெற்று அதனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வங்கி நிர்வாகிகள் மற்றும் மலைகிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நாயக்கனேரி பகுதியில் உள்ள நியாயவிலைகடையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பள்ளிகளிலும், ஊரக வளர்ச்சி துறை சார்பில், மலைகிராமத்தில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்க்கொண்டார்...

Tags

Next Story