அச்சரப்பாக்கம் அருகே திமுக சார்பில் கல்வெட்டு திறப்பு

கல்வெட்டு திறப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அச்சரப்பாக்கம் அருகே திமுக சார்பில் கல்வெட்டு திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வேடந்தாங்கல், மொரப்பாக்கம், கூடலூர், தண்டலம் தீட்டாளம், ஆகிய பகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் திமுக என்ற அடிப்படையில் புதிய கழக கல்வெட்டுகள் திறப்பு, மற்றும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு கழகக் கொடியை ஏற்றி வைத்து புதிய கல்வெட்டுகளை திறந்து வைத்து இனிப்புகள் மற்றும் அன்னதானங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து கடம்பூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமையல் கூட்டத்தினை ரிப்பனை வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெரும்துணைத் தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், மாவட்ட கவுன்சில மாலதி உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story


