அறிவுசார் மையம் துவக்கம்
தமுக்கம் மைதானம் பகுதியில் அறிவுசார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சியில் 2.50 கோடி மதிப்பீட்டிலும் திருமங்கலம் நகராட்சியில் 1.88 கோடி மதிப்பீட்டிலும் அலங்காநல்லூர் பேரூராட்சியில் 1.49 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட அறிவு சார்ந்த மையங்களை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதானம் சாலையில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார் இந்த நிகழ்வில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ தளபதி வெங்கடேசன் பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story