வேலூர் : அறிவுசார் மையம் திறப்பு

வேலூர் : அறிவுசார் மையம் திறப்பு

அறிவுசார் நூலகம்


வேலூர் அருகே நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வேலூர் அருகே நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்தின் கீழ் மண்டலம் -4 க்குட்பட்ட அரியூரில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் மண்டலம்-4 வார்டு 58ல் அரியூரில் 11840.70 சதுர அடியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் தரை தளம், முதல் தளம் என இரண்டு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மையத்தில் தரைதளம் 4843.27 சதுர அடியில் வரவேற்பு மற்றும் காத்திருப்பு பகுதி, மேலாளர் அறை , சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, வாசிப்பு அறை, சிறுவர்கள் வாசிப்பு அறை,உணவு அறை, இருப்பு அறை ,நூலகர் பிரிவு, கணினி மையம், நாளிதழ் மாடங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தம் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளம் 2925.40 சதுர அடியில் வாசிப்பு அறை , கணினி மையம், ஸ்மார்ட் வகுப்பறை , கண்காணிப்பு கேமரா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, புத்தக அலமாரிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story