திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கம் !

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கம் !

பின்னலாடை கண்காட்சி 

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி ஹைடெக் வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் இயந்திர கண்காட்சி துவங்கப்பட்டது.
திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி துவக்கம். இன்று முதல் 4-ந் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் சைனா , அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஜப்பான், போன்ற வெளி நாட்டு தயாரிப்பு அதிநவீன அதிநவீன இயந்திரங்கள் காட்சி படுத்தபட்டுள்ளன. பின்னலாடை தொழில் துறையினர்,ஏற்றுமதியாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஹைடெக் வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 17-வது சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியானது இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நடைபெறுகிறது, 17-வது ஆண்டாக நடைபெறும் சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி 325 அரங்குகள், 176-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது, இதில் சைனா, இலங்கை, ,ஜெர்மன், ஆஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து தாயாரிக்கப்பட்ட அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஏராளமான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாய ஆலை தொழிற்சாலைகளில் சாயங்களை துணிகளில் ஏற்றுவதற்கு ரோபோடிக் இயந்திரங்கள், பனியன் பார்சல்களை கொண்டு செல்லும் ரோபோடிக் மெஷின், நிட்டிங் இயந்திரங்கள் ஒரு நாளைக்கு ஒரு டன் உற்பத்தி செய்ய கூடிய இயந்திரம், டியூப்லர் நிட்டிங் இயந்திரம், காம்பேக்டிங் மெஷின் உதிரி பாகங்கள், துணிகளுக்கு சாயமேற்றும் புதிய வகை டையிங் மெஷின்கள், தானியங்கி ஆய்வகம், பிரிண்டிங் இயந்திரங்கள், டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள்,நிட்டிங் இயந்திரங்கள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயந்திரங்கள் இடம் பெற்றிருந்தது, அனைத்துபின்னலாடை உற்பத்திக்கு உதவும் மதிப்பு கூட்டப்பட்ட உபகரண பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.இந்த கண்காட்சியை காண ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர்.

Tags

Next Story