கபிலர் நினைவுத்தூண் திறப்பு !
கபிலர் நினைவிடம்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்கோவலூரில் நிறுவப்பட்டுள்ள கபிலர் நினைவுத்தூணை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்கோவலூரில் நிறுவப்பட்டுள்ள கபிலர் நினைவுத்தூணை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். திருக்கோவலூரில் உள்ள கபிலர் நினைவுத்தூணுக்கு மலர்தூவி புகழஞ்சலிசெய்தனர். நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கீதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, மாவட்டத் தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர் சி.ஆர்.சம்பத் வரவேற்றார். கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார உதியன் தொடக்கவுரையாற்றினார். திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், வேட்டவலம், ஆகிய ஊர்களின் தமிழ்ச் சங்கத்தினர், மற்றும் ஏராளமான தமிழறிஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்
Next Story