போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூலக திறப்பு விழா
நூலகம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1987-1988 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சார்பாக புனரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா நடைபெற்றது. போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்
நூறாண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில் 1987-1988 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் சார்பாக நூலகத்தை புனரமைக்கப்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான கே.வி. சேகரன் திறந்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், மனம் இருந்தால் மார்க்கமுண்டு முன்னாள் மாணவர்கள் தான் படித்தபள்ளிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என யோசித்து யோசித்து செய்து கொண்டிருக்கும் வேளையில் ஏறக்குறைய இந்த நூலகத்திற்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேலான புத்தகங்களை வழங்கி அதற்குண்டான வேலைபாடுகள் எல்லாம் செய்து நாமெல்லாம் படிக்கக் கூடிய வகையிலேயே அந்த நூலகத்தைப் பார்க்கும்போது உண்மையிலேயே அவர்களை நாம் பாராட்ட வேண்டும் என பேசி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். இவருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.