நூலகத் தந்தை எஸ்.ஆர் ரங்கநாதன் நினைவு நூலகம் திறப்பு
நூலகம் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகம் கட்டிடம் ரூ. 1 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 390 ச.மீ. அளவில் உள்ளது. இதில் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் உள்ளது. இதில் நூலகர் அறை, செய்தி தாள் மற்றும் புத்தக வாசிப்பு அறை, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, போன்ற வசதிகள் தரை தளத்திலும், கணினி அறை, வாசிப்பு அறை, புத்தக அறை, தமிழ் பிரிவு, பெண்கள் கழிப்பறை போன்றவை முதல் தளத்திலும், புத்தக சேமிப்பு அறை இரண்டாம் தளத்திலும் அமைந்துள்ளது.நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன்,பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி எஸ்.ஆர்.அரங்கநாதன் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் அரசு அலுவலர்கள்,புத்தக வாசிப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதநிதிகள் கலந்து கொண்டனர்.