மேமோகிராம், டெக்ஸா ஸ்கேன் சென்டர் திறப்பு விழா !

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேமோகிராம், டெக்ஸா ஸ்கேன் சென்டர் திறப்பு விழா

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியிக்கவியல் துறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தலை சிறந்த மற்றும் அனுபவமிக்க பேராசிரியர், துணை மற்றும் உதவி பேராசியர்கள் மற்றும் மருத்துவ குழு நோயாளிகளை கூர்ந்த கவனத்துடன் ஆராய்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இத்துறையில் அதிநவீன MRI, CT, ULTRASOUND, X-RAY, FLOUROSCOPY,கருவிகள் கொண்டு உலகத்தரம் வாய்ந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையில் மேமோகிராம், டெக்ஸா ஸ்கேன் மற்றும் முழு உடல் கொழுப்பு அளவு மதிப்பீடும் கருவியை சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தலைவர் மற்றும் செயலாளருமான டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் துவக்கி வைத்தார்.

விழாவில் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பிரகாசம், மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்புரமணியன், டாக்டர் மனோகரன், டாக்டர்.சோமசுந்தரம், துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ இயக்குநர் டாக்டர்.பிரகாசம் அவர்கள் பேசும் போது டெக்ஸா ஸ்கேன் என்பது உடல் எலும்புகளின் அடர்த்தியை அறிவதற்கான சிறந்த வழிமுறையாகும். இக்கருவி மூலமாக மிக குறைந்த கதிர்வீச்சு கொண்டு எலும்புகளின் நலனையும் எலும்பின் திண்ம குறைபாட்டின் அளவையும் துல்லியமாக கணக்கிட முடியும்.

இந்த அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு மிக விரைவாக முழு உடல் கொழுப்பு அளவை துல்லியமாக அறிய முடியும். மேலும் மேமோகிராம் கருவி மூலம் மார்பாக புற்று நோய் மற்றும் மார்பகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயாளிக்கு உரிய மற்றும் துரிதமான சிகிச்சை வழங்க முடியும். எனவும் இந்த வசதிகள் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதிரியிக்கவியல் துறையில் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags

Next Story