ராமநாதபுரத்தில் மினி உணவகம் திறப்பு விழா - ஏராளமான ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

ஜெகன் திரையரங்கம் அருகில் மினி உணவகம் திறப்பு விழாவில் ஏராளமான ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெகன் திரையரங்கம் பகுதியில் மினி கேண்டின் உணவகத்தை முத்து ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை டாக்டர் அரவிந்த்ராஜ் துவக்கி வைத்தார். அதனை முன்னாள் ரோட்டரி ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா பெற்றுக்கொண்டார். விஜயராணி முத்து ராமகிருஷ்ணன் கௌசல்யா ஜெயராஜ் கஸ்தூரி ராஜா மணி சசிகலா வெற்றிவேல் ஆகியோர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். வருகை புரிந்த அனைவரையும் ஜெகன் திரையரங்கு உரிமையாளர் ரோட்டரி சங்க நிர்வாகி சுகுமார் வரவேற்றார்.

பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோள் ஏற்று இப்பகுதியில் நாவிற்கு சுவையான தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் பர்கர், பீசா, தந்தூரி, செஸ் டொமட்டோ, சிக்கன் பீட்சா, சிக்கன் பர்கர், பன்னீர் பர்கர் என மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் விரும்பும் அறுசுவை நிறைந்த சிறப்பு மினி உணவகம் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் , ரமேஷ் திரையரங்கு உரிமையாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ரமேஷ்பாபு ரோட்டரி சங்க நிர்வாகி சண்முக ராஜேஸ்வரன் ஆடிட்டர் லோகநாதன், பொறியாளர் காந்தி வீரபூபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி சினிமா உரிமையாளரும் ரோட்டரி சங்க ஆளுநருமான பொறியாளர் தினேஷ் பாபு நன்றி தெரிவித்தார். ஜெகன் அகிலன் அரவிந்த் ஜெகன், அருணன் ஜெகன் ஆகியோர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story