அரசு உயர்நிலைப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு
நவீன வகுப்பறை திறப்பு
கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதி பாக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள நவீன வகுப்பறையை திறந்து வைத்தார். விழாவுக்கு விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியசீலன் மாவட்ட கவுன்சிலர் சாந்தி தங்கசிங்கம் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து விராலிமலை கிழக்கு ஒன்றியம் ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நவீன வகுப்பறை நீர் பழனி, மண்டையூர், களமாவூர் பயணியர் நிழற்குடை ஒளவையார் பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியென கரூர் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்தார். விழாவில் காங்கிரஸ் ஒன்றிய தலைவர் ராஜா குமாரசாமி விராலிமலை பெண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில்நாதன் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.