மோகன சிதம்பரம் நினைவுத் தொண்டு அறக்கட்டளை தொடக்க விழா

காங்கேயம் வடசின்னாரிபாளையம் ஊராட்சி மேட்டுப்பாறை பகுதியில் விஜயகுமார் குரூப் ஆப் கிரியேஷன்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மோகன சிதம்பரம் நினைவுத்தொண்டு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது
காங்கேயம் அடுத்த வடசின்னாரிபாளையம் ஊராட்சி மருதுரையான் வலசு மேட்டுப்பாறை பகுதியில் விஜயகுமார் குரூப் ஆப் கிரியேஷன்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தாய் மற்றும் தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக புதிதாக மோகன சிதம்பரம் நினைவுத்தொண்டு அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவானது ஹோமம் வளர்க்கப்பட்டு பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் எம் சி விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சத்யா சந்திரசேகரன், செயலாளர் பொன்.ருத்ரகுமார், துணைச்செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சரவணன் மற்றும் இணைப்பொருளாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னணி வகித்தனர். காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலும் முதியோர் இல்லம் மற்றும் மனநல காப்பகம் அறக்கட்டளை செயல்படும் என தெரிவித்துள்ளனர். விழாவில் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story