அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல்

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் அமைக்கபட்டுள்ள கோடை கால நீர்,மோர் பந்தலை முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் திறந்து வைத்தார்.

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் தூத்துக்குடி 3ம்மைல் பகுதியில் அமைக்கபட்டிருந்த கோடை கால நீர்,மோர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் தர்பூசணி,வெள்ளரி, அண்ணாச்சிபழம், கிர்ணிபழம், வாழைபழம் உள்ளிட்ட பழவகைகள் மற்றும் இளநீர், பழரசம், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களை மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி அருந்தினர்.‌ இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன், தனம், மாவட்ட இளம்பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் அணி செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சேம்ராஜ், சகாயராஜ், யுவன் பாலா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story