திண்டுக்கல் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திண்டுக்கல் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

நீர்மோர் பந்தல் திறப்பு 

திண்டுக்கல் அருகே அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே கோடைகால வெப்பத்தின் காரணமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை கழகப் பொருளாளரும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் .

உடன் கழக அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சீனிவாசன் பேசியதாவது: அதிமுக எப்போதும் மக்கள் தொண்டாற்ற கூடிய கட்சி. அதிமுகவையும், மக்களையும் பிரிக்க முடியாது.

கோடைகாலத்தில் மக்களின் சிரமங்களை அறிந்து நாங்கள் நீர் மோர் பந்தலை திறந்து உள்ளோம். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறியதற்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story