அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் மொரப்பூர் மேற்கு ஒன்றியம், கம்பை நல்லூர் பேரூராட்சியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் கோடை வெப்பம் 100 டிகிரி தாண்டி நிலவி வருவதை அடுத்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் இன்று அரூர் சட்டமன்றத் தொகுதி மொரப்பூர் மேற்கு ஒன்றியம் கம்பை நல்லூர் பேரூராட்சி இணைந்து தருமபுரி மாவட்ட கழக செயலாளர் , முன்னாள் அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கேபி.அன்பழகன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா செய்யப்பட்டது.

இதில் பொது மக்களுக்கு மோர்,இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, நுங்கு, உள்ளிட்டவற்றை வழங்கினர். இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story