அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
திருப்பூர் கொங்கு நகர், என்.ஆர்.கே.புரத்தில் பகுதிச் செயலாளர் ஹரிஹரசுதன், பி.கே.முத்து ஏற்பாட்டில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பங்கேற்று ரிப்பன் வெட்டி நீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரிக்காய், நொங்கு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகர மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் பூலுவாப்பட்டி பாலு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசுகையில், தமிழகத்தில் மழை பெய்யாமல் கிராமங்கள், சிறு நகரங்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது,
இத்தகைய சூழ்நிலையில் விவசாயத்தை சார்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பிற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர், தமிழக மக்கள் வேதனையில் மூழ்கியுள்ளது, முன்பு கருணாநிதி காங்கிரஸ் சாரை பார்த்து கும்பிட்டு இருக்கிறது குடல் தருகிறது குளுகுளு ஊட்டி தேவையா என்று கேள்வி எழுப்பினார்,
இப்பொழுது தமிழக மக்கள் விலைவாசி உயர்வாளும், வேலையின்றியும், கும்பி எரிந்து குடல் கருகி தவித்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொடைக்கானல் சுற்றுலா தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோன்று கோடைகால சிறப்பு முகாமிற்கு திருப்பூர் போன்ற நகரங்களில் தொழிலாளர் வேலை இன்றி தவித்து வரும்போது உதயநிதி ஸ்டாலின் அரசு வசூலிப்பது வேதனை அளிப்பதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேட்டியளித்தார்.