பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் அய்யப்ப ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராமராஜ், செயலாளர் வடிவேலு, மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.. விழாவில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, ஒபிசி அணி பொருளாளர் மோகன் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story