காமலாபுரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு
நீர்மோர் பந்தலை திறந்த வாசன்
காமலாபுரத்தில் நீர்மோர் பந்தலை தமாகா தலைவர் ஜிகே வாசன் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜிகே வாசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், இளநீர் உள்ளிட்ட தாகம் தணிக்கும் பொருட்களை வழங்கி விழாவை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமாகா மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகுநந்தகுமார் உள்ளிட்ட தமாகா மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story