எடப்பாடியில் நீர் மோர் பந்தல் திறப்பு
நீர்மோர் பந்தல்
எடப்பாடி நகர திமுக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி எம் செல்வகணபதி நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிற இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் டி எஸ் எம் பாஷா தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி எம் செல்வகணபதி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர்,கம்மங்கூழ்,மோர்,வாழைப்பழம் போன்ற பல வகைகளை வழங்கினார். இதேபோன்று சங்ககிரி, கொங்கணாபுரம்,ஜலகண்டாபுரம், வனவாசி,நங்கவள்ளி, ஆகிய பகுதிகளிலும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ கணேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story