காட்டுப்புதூர்  ஊராட்சியில் புதிய கட்டிடம் திறப்பு

காட்டுப்புதூர்  ஊராட்சியில் புதிய கட்டிடம் திறப்பு
X
புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றிய கலெக்டர் .
காட்டுப்புதூர்  ஊராட்சியில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்திற்குட்பட்ட, காட்டுப்புதூர் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலை பி.என்.ஸ்ரீதர், தலைமையில் குத்துவிளக்கேற்றி, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், தமிழக ஊரக உள்ளாட்சித்துறையின் சார்பாக காட்டுப்புதூர் ஊராட்சியில் ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின்கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத்தொடர்ந்து, புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிடப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் கிறிஸ்டிபாய் , பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story