அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு. - எம்.எல்.ஏ பங்கேற்பு

செருவா விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தை எம்எல்ஏ நா.அசோக்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை திட்ட செயலாக்கத்தின் கீழ், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் இயங்கி வரும் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தினை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, பேராவூரணி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், திமுக ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயராமன், தங்க ராமஜெயம், செருவாவிடுதி ஒன்றிய குழு உறுப்பினர் மாலா போத்தியப்பன், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் செல்வேந்திரன், சாமிநாதன், திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர். சௌந்தரராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் , ஒப்பந்தக்காரர் துரைராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் மரு அருள் தலைமையில் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், அனைத்து நிலை பணியாளர்கள் செய்திருந்தனர்.

சேதுபாவாசத்திரம் இதேபோல், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி கழனிக்கோட்டை கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து களனிக்கோட்டையில் புதிய துணை சுகாதார கட்டிடத்தில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சக்ரவர்த்தி, துணைத் தலைவர் நீலகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story