ஆத்தூரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

ஆத்தூரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு , ஊராட்சி மன்ற தலைவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி இயங்கி வருகிறது இங்கு நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த ₹40 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியிலிருந்து கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில்,

இன்று கொத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கே பி எஸ் ராஜாரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் G. சதீஷ் என்கிற சத்யராஜ் 9வது வார்டு உறுப்பினர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இருபால் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story