ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை - முதல்வர் திறப்பு

ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை - முதல்வர்  திறப்பு

கட்டிட திறப்பு 

திருவாவடுதுறை ஊராட்சி டீ மேலக்கரை பகுதியில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று ரூ.155.42 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதில் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவாடுதுறை ஊராட்சி டி.மேலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரால் திறக்கப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக் தலைமையில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் மற்றும் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வைத்தியநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் ஏராளமான திமுக பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story