புதிய கைத்தறி பூங்கா திறப்பு விழா !
கைத்தறி பூங்கா
சின்னாளப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கைத்தறி பூங்காவை ஐ.பெரியசாமி, ஆர்.காந்தி திறந்து வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. கைத்தறி பூங்காவை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், 'சின்னாளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான இந்த கைத்தறி பூங்காவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 70 கைத்தறிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் 90 நெசவாளர்கள் நேரடியாகவும், 160 நெசவாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.இங்கு மென் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், டை மற்றும் டை சேலைகள், சுடிதார் ரகங்கள் போன்ற ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதன்மூலம் நெசவாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.550 முதல் 650 வரை ஊதியம் பெறும் வகையில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
Next Story