அரசு கலைக்கல்லூரியில் ரூ.22 கோடியில் புதிய ஆய்வக கட்டிடங்கள் திறப்பு விழா
திண்டிவனத்தில் உள்ள ஆ.கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பில் 6 ஆய்வக கட்டடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஆ.கோவிந்தசாமி அரசு கலை கல்லூரி யில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பில் 6 ஆய்வக கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதை சென்னை தலைமை செயலகத் தில் இருந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச் சர் செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆய்வகத்தை மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றையும் அவர் நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், ஒலக் கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், மாவட்ட தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரம ணன், நகர செயலாளர் கண்ணன், மரக்காணம் ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, கல்லூரி முதல்வர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.