புதிய பால் சேகரிப்பு மையம் திறப்பு
புதிய பால் சேகரிப்பு மையம் திறப்பு
ரிஷிவந்தியம் அருகே 16. 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டி கட்டி முடிந்த பால் சேகரிப்பு மைய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.கார்த்திகேயன் திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியக்கொள்ளியூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் கொண்டு கிராம பொதுமக்கள் பால் உற்பத்தி செய்து வருகின்றனர் இவர்கள் உற்பத்தி செய்யும் பால் ஏற்றுமதி செய்வதற்கு சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேல் சென்று ஊற்றி சிரமப்படுவதால் இந்த கிராம மக்களின் நலன் கருதி ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.கார்த்திகேயன் பெரியகொள்ளியூர் ஊராட்சியை மையமாகக் கொண்டு 16.33 லட்சம் மதிப்பீட்டில் TN.315 என்னும் கடையன் கொண்ட புதிய பால் உற்பத்தி சேமிப்பு மைய கட்டிடம் கட்டி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பால் உற்பத்தி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி மற்றும் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் துரைமுருகன் மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை கவுன்சிலர் பன்னீர்செல்வம் பெரியக்கொல்லியூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story