காங்கேயத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

காங்கேயத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

பெட்ரோல் பங்க் திறப்பு விழா 

காங்கேயத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. தாராபுரம் கே கே அசோசியேட்ஸ் குழுமத்தினரின் மெசர்ஸ் முத்துலட்சுமி பியுல்ஸ் நிறுவனத்தின் சார்பில்,

இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனை மையத்தை 16 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் கமலக்கண்ணனின் தந்தையார் அக்ரோ சென்டர் உரிமையாளருமான வெள்ளியங்கிரி திறந்து வைத்தார், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பெட்ரோல் பங்கின் கணினி கட்டுப்பாட்டு அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு பெட்ரோல் டீசல் விற்பனை பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் பெட்ரோல் விற்பனையை துவக்கி வைத்தார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ் வி செந்தில் குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர் , தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, பிரபாவதி பெரியசாமி, ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்

மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், திமுக நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் ,ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவு அதிகாரி தீபக் குமார், இந்தியன் ஆயில் மண்டல தலைமை மேலாளர் பிரேமலதா, தொழில்நுட்ப பிரிவு அலுவலர் சிவகுமார் ஜெய்ஸ்வால்,

ராகுல், ஸ்ரீரில்ஷாஜீ, ஷாகர் குப்தா, உள்ளிட்ட இந்தியன் ஆயில் நிறுவன அலுவலர்கள், பொதுப்பணித்துறை முன்னாள் அலுவலர் ஆர் வெள்ளியங்கிரி திமுக நகரக் கழக துணைச் செயலாளரும், 16 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான வி கமலக்கண்ணன், நவஜோதி தேவி, நிரஞ்சன், அனுரதி ,டாக்டர் பாலசுப்பிரமணியம் ,வி.பூங்கொடி, மோனிஷ் ,ப்ரித்வி, தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகப் பொறியாளர் சுப்பராயன்,

கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி, டாக்டர் சஞ்சீவ் கிஷோர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திறப்பு விழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை தாராபுரம் அக்ரோ சர்வீஸ் சென்டர், சன் பயோடெக் ,வி கே .கண்ணன் டிரேடர்ஸ் ,மற்றும் முத்துலட்சுமி பியூல்ஸ், நிர்வாகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story