புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியேற்பு
வரவேற்பு
குடியாத்தம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவியேற்ற ஹேமலதாவிற்கு ஊழியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் பேர்ணம்பட்டு ஊராட்சி ஓன்றியத்திற்கு மாற்றப்பட்டு அங்கு பணியாற்றி வந்த ஹேமலதா குடியாத்தம் ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார் . இதனைத் தொடர்ந்து புதிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சக அதிகாரிகள், பணியாளர்கள் சால்வை அணிவித்து மரியாதை நிமர்த்தமாக சந்தித்தனர் மேலும் பணி மாறுதல் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயனுக்கு பணி பாராட்டு விழா நடைபெற்றது இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story