தலைமை தபால் அலுவலகத்தில் பார்சல் பேக்கிங் மையம் துவக்கம்
தலைமை தபால் நிலையம்
கோவை தலைமை தபால் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ள பார்சல் பேக்கிங் மையத்தில் பேக்கிங் செய்வதற்கான அனைத்து பொருட்களும் கிடைக்கும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை தலைமை தபால் அலுவலகத்தில் பார்சல் பேக்கிங் மையம் துவக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைக்காகவும் தொழில் ரீதியாகவும் மக்கள் உள்நாட்டிற்கும் வெளிநாடுகளுக்கும் பார்சல்களை தபால்கள் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பார்சல் பேக்கிங் மையமானது பேக்கேஜிங் சம்பந்தமான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது.
இந்த மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் இங்கு அட்டைப் பெட்டிகள் அவர்கள் செலோடேப் ட்ராப்பிங் எந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கப்பெறும் கிடைக்க பெறும். மிக குறைந்த செலவில் பொதுமக்களின் பார்சல் பார்க்கிங் செய்யவும் பார்சல் பத்திரமாக அனுப்பவும் இந்த மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags
Next Story