பகுதி நேர கூட்டுறவு நியாய விலைகடை திறப்புவிழா
பகுதி நேர கூட்டுறவு நியா விலைகடை திறப்புவிழா
பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ,ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம்.பொது விநியோக திட்டம், KK-259 மூங்கிலேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதூர் புங்கனை ஊராட்சி,கோணப்பட்டி கிராமத்தில் பகுதி நேர கூட்டுறவு நியா விலைகடை திறப்புவிழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், MLA மக்களின் பயன்பாட்டிற்காக குத்திவிளக்கேற்றி சிறப்புரையாற்றி திறந்து வைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story