மேலமங்கைநல்லூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

மேலமங்கைநல்லூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ 

மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூரில் பயணிகள் நிழற்குடையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் தொகுதி நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் மேல குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரில் பயணிகள் நிழற்குடையானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டது .

அதன் திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர்,

குத்தாலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மங்கை சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story