உலக நன்மை வேண்டி பிரார்த்தனை!

X
பள்ளிவாசல் திறப்பு
நத்தத்தில் தொழுகை பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக் நகரில் டவுன் பள்ளி - மஸ்ஜித் யூசுப் தொழுகை பள்ளிவாசல் திறப்பு நடைபெற்றது. பள்ளிவாசல் இமாம் நாசிர் ஹுசேன் கிராஅத் ஓதினார். ஜமாத் தலைவர் சேக் ஒலி அனைவரையும் வரவேற்றார். திண்டுக்கல் தாருல் உலூம் யூசுப்பியா அரபிக்கல்லூரி முதல்வர் அன்வாரி முகமது அலி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது : ஒரு ஊர் என்று இருந்தால் அங்கு அவசியம் பள்ளிவாசல் இருக்க வேண்டும். மனிதப் பிறப்பு என்பது தன்மையால் ஒன்றுபட்டு இருக்கிறது. மனிதனை படைத்த இறைவனும் எல்லோருக்கும் பொதுவானவன். அது போல் எங்கு பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ அது அங்குள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாகும் என்றார்.
Next Story
