ராசிபுரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதார வளாகம் திறப்பு

ராசிபுரம் அருகே  ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதார வளாகம் திறப்பு

கழிவறை திறந்து வைப்பு

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆர்.புதுப்பட்டி அரசு பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் கோவை மார்டின் பவுன்டேசன் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மாணவியர் சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

செயலர் ஆர்.ஆனந்தகுமார் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் ராசிபுரம் ரோட்டரிசங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஆர்.வேல்முருகன் வரவேற்றார். கட்டிமுடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் எஸ்.ராகவன் திறந்து வைத்துப் பேசினார்.

இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய மார்டின் பவுன்டேசன் டிரஸ்டி லீமாரோஸ் மார்ட்டின் காணொளி வாயிலாக சுகாதார வளாகத்தின் அவசியம் குறித்து மாணவியர்களிடம் பேசினார். விழாவில் நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த மண்டல உதவி ஆளுநர் பி.முத்துராஜா, ராசிபுரம் ரோட்டரி கிளப் 22-23-ம் ஆண்டின் தலைவர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், மண்டல ரோட்டரி உதவி ஆளுநர் அ.ராஜூ, முன்னாள் உதவி ஆளுநர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, திட்டச்சேர்மேன் இ.ஆர்.சுரேந்திரன், ரோட்டரி செயலர் ஆர்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், இப்பள்ளிக்கு மிதிவண்டி நிறுத்துமிடம், குடிநீர் நீர்தேக்கத்தொட்டி போன்றவற்றை அமைத்துத்தருவதாக ராசி இன்டர்நேஷனல் பள்ளித் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முடிவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags

Next Story