கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி கட்டிடங்கள் திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி கட்டிடங்கள் திறப்பு

கட்டிடங்கள் திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளில் புதியதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கானலா பாடி, பொன்னமேடு, கணியம் பூண்டி, உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளில் ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார். கீ

ழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானலா பாடி, அங்குணம், பொன்னமேடு , கணியம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் புதியதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா, சோமாசி பாடியில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா, சிறு நாத்தூர் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரஞ்சி ஆறுமுகம், தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் அய்யா கண்ணு, ஆணையாளர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் அனைவரும் வரவேற்றார், இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தும், ஆதிதிராவிடர் நல பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டியும், சோமாசி பாடியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து நிழற்குடையும் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story