அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை கட்டிடம் திறப்பு

அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை கட்டிடம்  திறப்பு
X
குமரி அரசு மருத்துவ கல்லூரி கட்டிட திறப்பு விழா
மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூபாய் 6.02 கோடி மதிப்பீட்டில் 32 படுக்கை வசதியுடன் இரண்டு அறுவை சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் தேசிய சுகாதார திட்ட நிதியிலிருந்து அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகர மேயர், மருத்துவ துறை துணை இயக்குநர், கல்லூரி டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story