மேல்மருவத்தூரில் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை தொடக்க விழா

மேல்மருவத்தூரில் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை தொடக்க விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூரில் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை தொடக்க விழா நிகழ்ச்சி ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் தாளாளர் டாக்டர். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆதிபராசக்தி குழுமப் பள்ளிகளின் தாளாளர் திருமதி ஸ்ரீதேவிரமேஷ் கலந்து கொண்டு ஆயுர்வேத மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பங்காரு அடிகளார் அருளிய இயற்கை மருத்துவத்தின் அடையாளமாகத் துவக்கப்பட்டுள்ள இந்த சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை ஆன்மிகத்தின் பாரம்பரியமும்,

ஆயுர்வேதத்தின் சிறப்பியல்புகளும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அன்னையின் அருளாசியுடன் மருவத்தூர் மண்ணில் 5000 வருடப் பாரம்பரியம் கொண்ட ஆயுர்வேதத்தின் தனித் தன்மையுடன் இந்த மருத்துவமனையைத் துவக்குவதில் தான் பெருமையும்,மகிழ்ச்சியும் அடைவதாகவும், இங்கே நவீன மருத்துவத்தின் சிறப்புகளோடு இந்த ஆயுர்வேத மருத்துவமனை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு நல்ல சிகிச்சையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்று கூறினார். இந்த துவக்க விழாவில் ஆதிபராசக்தி மருத்துவமனை,

ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செவிலியர் கல்லூரி, பிஸியோதெரபி கல்லூரியிலிருந்துஇருந்து முதல்வர்கள், துறைத் தலைவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை வைத்தியநாதன் தலைமையில் சுயம்பு ஆயுர்வேத மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story