தக்கலை பீர் முகமது சாகிபு பள்ளி ஆண்டு விழா தொடக்கம்
குமரி மாவட்டம் தக்கலையில் ஞான மாமேதை பீர் முஹம்மது ஷாகிபு பள்ளிவாசல் உள்ளது. இங்குள் ஆண்டு விழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.
இதன்படி இந்த வருடத்திற்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடியில் சந்தனம் பூசப்பட்டு பின்னர் கொடி கட்டப்பட்டது. நிகழ்வில் சார் ஆட்சியர் (பொறுப்பு) புகாரி, கல்குளம் தாசில்தார் கண்ணன், விழாக்குழு உறுப்பினர்களான அக்ரி நிஜாமுதீன், சாகுல் ஹமீது, முகமது யூனஸ், முகமது பஷீர் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் 25ஆம் தேதி வரை தினமும் இரவு மௌலீது ஓதுதல், 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மார்க்கப்பேருரை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்க அறிஞர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
25ஆம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப் புகழ்ச்சி பாடல் நடைபெறுகிறது.26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும் 28 -ம் தேதி மூன்றாம் ஸியாரத் நற்செய்தி வழங்குதல் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு விழா நடத்துவதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் பத்மநாதபுரம் சார் ஆட்சியர் கண்காணிப்பில் விழா குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.