குமாரபாளையத்தில் தளபதி விஜய் நூலகம் திறப்பு

நூலக திறப்பு விழா
பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் கல்வியை முழுமையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முழுவதும் நடிகர் விஜய் உத்தரவின் பெயரில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர், தளபதி விஜய் நூலகத்தை துவக்கி வருகின்றனர். அதேபோல் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், குமாரபாளையத்தில் பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள தனியார் திரையரங்கம் எதிரே தளபதி விஜய் நூலகம் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது .இதில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார் . நூலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், தேச தலைவர்கள் ,திராவிட இயக்க சிந்தனையாளர்கள், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறும் பொழுது, அனைவரும் கல்வி அறிவு மேம்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து பொதுமக்களும், மாணவ, மாணவியரும் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
