திருச்செங்கோட்டில் முதல் சிஎன்ஜி பங்க் திறப்பு விழா
திருச்செங்கோட்டில் முதல் சிஎன்ஜி பங்க் திறப்பு விழா நடந்தது.
திருச்செங்கோட்டில் முதல்முறையாக கம்ப்ரைஸ்டு நேச்சுரல் கேஸ் (CNG)பங்க் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜயலட்சுமி ஏஜென்சி நிறுவனர் ஆர் வி ஆர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார், ஆர் வி ஆர் சரவணன் முருகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜான்சன் நிறுவனங்களின் தலைவர் திரு ஜான்சன் நடராஜன், பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர் நடேசன், திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் மற்றும் பாரத் பெட்ரோலியம் சேல்ஸ் ஆபிஸர் வெங்கடேஸ்வர ராவ், டெரிடெரி கோ ஆர்டினேட்டர் அருண் சுப்பிரமணியம், IRM நிறுவனம் பொது மேலாளர் அறிவழகன், ராம் பாஸ்கர், விவேக், அவர்கள் கலந்து கொண்டு சிஎன்ஜி கேஸ் விற்பனையை துவக்கி வைத்தனர்