மருத்துவ கல்லூரி வளாக புதிய கட்டிடம் திறப்பு

மருத்துவ கல்லூரி வளாக புதிய கட்டிடம் திறப்பு
அரசு மருத்துவ கல்லுரி வளாகத்தில் புதிய கட்டிடம் திறந்த அமைச்சர் உடன் கலெக்டர்
குமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

குமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட ரூ.27.5 இலட்சம் மதிப்பிலான புனரமைக்கப்பட நோயாளிகளின் உடனிருப்போர் காத்திருப்போர் அறை (பெண்கள் மற்றும் ஆண்கள்), ரூ.19.14 இலட்சம் மதிப்பிலான புனரமைக்கப்பட்ட உயர் சிறப்பு அதிதீவிர சிகிச்சை பிரிவு வார்டு மற்றும் ரூ. 17 இலட்சம் மதிப்பிலான குருதி உறைதல் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அமைச்சர் த.மனோ தங்கராஜ், திறந்து வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மருத்துவ கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் மரு.ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் மரு.விஜயலெட்சுமி, மரு.ரெனிமோல், மாநகராட்சி உறுப்பினர் மோனிகா விமலா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story