அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புதிய அரங்கம் திறப்பு விழா

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புதிய அரங்கம் திறப்பு விழா

 திறப்பு விழா 

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புதிய அரங்கத்தை வேந்தர் கணேசன் திறந்து வைத்தார்.

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக டாக்டர் ஏ.எஸ்.ஜி. என்ற பெயரில் புதிய அரங்கம் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய அரங்கை திறந்து வைத்தார். மாணவர்களின் கல்வியியல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பயன்பாட்டுக்காக தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை அனைத்து துறை பேராசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் செய்து இருந்தனர்.

Tags

Next Story