சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் மேம்பாடு திட்ட தொடக்க விழா

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் மேம்பாடு திட்ட தொடக்க விழா

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் மேம்பாடு திட்ட தொடக்க விழா

சேலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி நிறுவனம் மற்றும் சிறப்பு பள்ளியில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

சேலம் 3 ரோட்டில் செயல்பட்டு வரும் தேசிய தொண்டு அறக்கட்டளையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி நிறுவனம் மற்றும் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் 6 வயதுக்குட்பட்ட காது கேளாத இளம் சிறார்களுக்கான பயிற்சி மையம் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தற்போது சென்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து காது கேளாமையுடன், கண் பார்வை குறைபாடுகளுக்கான ஸ்பரஷ் பயிற்சி, வாழ்வியல் மேம்பாட்டுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்ணன், மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு சங்கத்தலைவர் ஜெயந்தி, சென்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முதன்மை பயிற்சி திறன் அலுவலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் நிறுவன தலைவர் வாசுகி விஜய் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் விஜய் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story