தீரன்சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா.

தீரன்சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா.

கல்லூரி திறப்பு விழா 

தீரன்சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பூரில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா இன்று நடந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை கடந்த 32 ஆண்டுகளாக அங்கேரிபாளையம் சாலையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மூலமாக நன்கொடை இல்லாத கல்வி சேவையை வழங்கி வருகிறது.

தற்போது கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் மற்றொரு மைல் கல்லாக திருப்பூர் அருகே அவினாசி-மங்கலம் தேசிய நெடுஞ்சாலை, வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் கல்லூரியை திறந்து வைத்து பேசினார்.

இதேபோல் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைய உள்ள தீரன் சின்னமலை சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டிடத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவுக்கு பள்ளி ஸ்தாபக தலைவர் பெஸ்ட் எஸ் ராமசாமி தலைமை தாங்கினார். அறக்கட்டளை ஸ்தாபக தலைவர் ஜீப்ரா பழனிச்சாமி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சுப்பராயன் எம்.பி, செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் கிறிஸ்து ராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்தூரி பிரியா, அறக்கட்டளை பொருளாளர் கந்தசாமி, துணை தலைவர்கள் முருகசாமி, குப்புசாமி, இணை செயலாளர் துரைசாமி, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story