நாச்சியார்கோவிலில் தெப்பத்திருவிழா துவக்கம்

நாச்சியார்கோவிலில் தெப்பத்திருவிழா துவக்கம்

வஞ்சுளவல்லித் தாயார் , சீனிவாச பெருமாள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் உள்ள வஞ்சுள வல்லி தாயார் உடனாய சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

108 வைணவ திவ்ய தேச தலங்களில் 20 ஆவது தலமாகவும், முக்தி தரும் 12 கோவில்களில் 11 வது தலமாகவும் போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத் திருவிழாவும், அதை ஒட்டி பிரசித்தி பெற்ற கல் கருட சேவையும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம், இதையொட்டி நேற்று சனிக்கிழமை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது வஞ்சுளவல்லித் தாயாருடன், சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கொடி மரத்துக்கு துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே வழிபட்டனர். தொடர்ந்து 26 ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக டிசம்பர் 19ஆம் தேதி கல் கருட சேவை நடைபெற உள்ளது.



Tags

Next Story