சங்கரன்கோவில் போக்குவரத்து கண்காணிப்பு அறை திறப்பு
சங்கரன்கோவில் போக்குவரத்து கண்காணிப்பு அறை திறப்பு
தென்காசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவலா்கள் கண்காணிப்பு அறையை காவல் துகைக் கண்காணிப்பாளா் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலை, பிரதான சாலை,ரயில்வே பீடா் சாலை சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து சிக்கனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்தப் பகுதியில் போக்குவரத்து காவலா்கள் நின்று போக்குவரத்தை சரி செய்து வருகின்றனா். இந்நிலையில் அந்தப் பகுதியில் போக்குவரத்து காவலா்கள் கண்காணிப்பு அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதை சங்கரன்கோவில் காவல் துகைக் கண்காணிப்பாளா் சுதீா் திறந்துவைத்தாா். பின்னா் சாலை விதி குறித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளா் சந்தனக்குமாா், வழக்குரைஞா் செல்வகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Next Story