பெரணமல்லூரில் பழங்குடியினர் இல்லங்கள் திறப்பு விழா
இல்ல திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம்.வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில், அரசு சார்பில் பழங்குடி மக்களுக்காக கட்டப்பட்ட பழங்குடியினர் இல்லங்கள் திறப்பு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. பெரணமல்லூர் வடுவன்குடிசை பகுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் ந.சேகரன் தலைமை தாங்கினார். இடைக்குழு உறுப்பினர் இரா.ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழங்குடியினமக்களுக்கு குடிமனைப்பட்டா மற்றும் அரசு வீடு வழங்கக்கோரி, தொடர்ந்து தலையீடு செய்தது அதன் காரணமாக, பெரணமல்லூர் பழங்குடியின குடும்பங்களுக்கு 11 குடிமனைப் பட்டா மற்றும் அரசு வீடு வழங்கப்பட்டது. அவ்வகையில் கட்டப்பட்டு வரும் 11 வீடுகளில் 8 வீடுகள் முடிக்கப்பட்ட நிலையில் பழங்குடியினர் வீடுகள் திறப்பு விழா, செங்கொடி உயர்த்தும் விழா, 'தோழர் சங்கரய்யா நகர்' பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. பழங்குடியினர் இல்லங்களை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் கட்சியின் செங்கொடியை உயர்த்தி வைத்து உரையாற்றினார். தோழர் சங்கரய்யா நகர் பெயர்ப்பலகையை மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் இரா. சரவணன் திறந்து வைத்துப் பேசினார். பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் மா.கௌதம் முத்து சிவராமன், துளசி, மார்க்சிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இடைக்குழு உறுப்பினர்கள் பி.கே.முருகன், பிரபாகரன், சரஸ்வதி, அறிவழகன் மற்றும் கிளை செயலாளர்கள் கே.பெருமாள், சிவகுருநாதன், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் முனியம்மாள் உள்ளிட்டோரும் ஏராளமான பழங்குடியினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிறைவாக கட்சியின் பழங்குடியினர் கிளை செயலாளர் அஞ்சலி நன்றி கூறினார்.