பெரியார் மணியம்மை பல்கலையில் துணைவேந்தர் பதவியேற்பு

பெரியார் மணியம்மை பல்கலையில் துணைவேந்தர் பதவியேற்பு

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலையில் புதிய துணைவேந்தராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றார்.

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலையில் புதிய துணைவேந்தராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றார்.

தஞ்சாவூர் வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில், புதிய துணைவேந்தராக முனைவர் வெ.இராமச்சந்திரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

புதிய துணைவேந்தராக பதவியேற்றுள்ள முனைவர் வெ.இராமச்சந்திரன் இளநிலை பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழகத்திலும், பொறியியல் முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தினை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெற்றவர் ஆவார். மேலும் 36 வருடங்களுக்கு மேலாக கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும், நாகலாந்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேனாள் துணைவேந்தர் முனைவர் செ.வேலுசாமி, பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பி.கே.ஸ்ரீவித்யா, முதன்மையர்கள், இயக்குநர்கள் பேராசிரியாகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story