அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தலை திறப்பு

அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தலை திறப்பு

சிவகாசியில் 2வது கட்டமாக நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.


சிவகாசியில் 2வது கட்டமாக நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசியில் 2வது கட்டமாக நீர்,மோர் பந்தலை திறந்த வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி.... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மாவட்டத்தில் முதற்கட்டமாக 41 இடங்களில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விதமாகவும்,தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அதனை தொடர்ந்து 2வது கட்டமாக புதியதாக 27 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டன, அதன் அடிப்படையில் சிவகாசி,விருதுநகர் மெயின் ரோடு ஆனைக்கூட்டம் முக்குரோட்டில் விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் சிவகாசி வடக்கு ஒன்றியம் சார்பாக நீர்,மோர் பந்தலை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார் மேலும் . பொதுமக்களுக்கு சூடு தணிக்கும் விதமாக இளநீர் தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன் மற்றும் சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி V.R.கருப்பசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story